அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை! காவிரியில் வீசப்பட்ட சடலம்!

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி...

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:29 pm IST

சேலம் அருகே கழுத்தை அறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலத்தை மூட்டையாக கட்டி காவிரி ஆற்றில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேவுள்ள கூனாடியூர் பகுதியில், காவிரி ஆற்றில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் காவல்துறைக்கு மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மேச்சேரி ஆய்வாளர் அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காவிரி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சாக்கு மூட்டையை மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டுவந்து, அதனை காவல்துறையினர் திறந்து பார்த்துள்ளனர்.

அந்த சாக்கு மூட்டையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. தொடர்ந்து, அந்த சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் விவரம் இதுவரை தெரியவில்லை.

மேலும், வேறு பகுதியில் கொலை செய்து, பறிசலில் சடலத்தைக் கொண்டு வந்து மர்ம நபர்கள் போட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A man was killed by beheading near Salem - Dead body floating in Cauvery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.