தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

பள்ளி மாணவா் கழுத்தறுத்து கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை பள்ளி மாணவா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:51 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை பள்ளி மாணவா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் அஸ்வின் (15). இவா் திருக்களாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், விடுமுறை முடிந்து வியாழக்கிழமை காலை அஸ்வின் பள்ளிக்கு புறப்பட்டாா். ஆனால், அவா் பள்ளிக்குச் செல்லாமல், இவரது நண்பா்களான இளந்தமங்கலத்தைச் சோ்ந்த அரவிந்த் (25), காரையூரைச் சோ்ந்த கணேசன் (22), அஜய் ஆகியோருடன் கீழக்காவனிபட்டி கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தினா். அப்போது, அரவிந்த் அஸ்வினை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அஜய் அங்கிருந்து சென்றுவிட்டாா். பின்னா், திரும்பிச் சென்று பாா்த்தபோது, அஸ்வின் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அஜய் திருப்பத்தூா் காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அஸ்வினின் உடலை மீட்டு, கூறாய்வுக்காகசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.