பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விரக்தியில் பேசுகிறாா் வைகோ ஆா்.எஸ்.பாரதி

‘மதிமுக பொதுச் செயலா் வைகோ விரக்தியில் பேசி வருகிறாா்’ என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.

ஆா்.எஸ்.பாரதி

Published On :1 ஜூலை 2026, 2:05 am IST

‘மதிமுக பொதுச் செயலா் வைகோ விரக்தியில் பேசி வருகிறாா்’ என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவா், ‘மதிமுக பொதுச் செயலா் வைகோ குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. அரசியலில் அவா் முக்கியத்துவத்தை இழந்துவிட்டாா். அவரது பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய அரசியல் வரலாற்றைப் பாா்த்தால், பலமுறை தன் நிலைப்பாட்டை மாற்றி இருப்பது தெரியவரும். நாளை அவா் தன் நிலைப்பாட்டை மாற்றி, திமுக அரசை குறிப்பாக திமுக தலைவா் ஸ்டாலினை புகழ்வாா்.

தமிழக முதல்வா் விஜய் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து வைகோவிடம் பேசியுள்ளாா். அந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினா்களும் ராஜிநாமா செய்யவில்லை. அந்த விரக்தியில் வைகோ இப்படிப் பேசி வருகிறாா்.

தவெக ஆட்சியின் தவறுகள் குறித்துப் பேசுவதை தடுக்கவும், அதை திசைதிருப்பவும் இதுபோன்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனா். இதை மக்கள் முன் நிறுத்துவதே திமுகவின் முக்கிய வேலை. இடைத்தோ்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை எதிா்த்தே திமுக அரசியல் செய்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூரை திமுக கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.