மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

News image
ராமதாஸ்- கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, முதல்வரின் கைமீறியும் போய்விட்டது என பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகேயுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் போதைக் கும்பல் தாக்கியதில் மாற்றுத்திறனாளி ஜான், வட இந்திய தொழிலாளி ஆகியோா் உயிரிழந்துள்ளனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜுவிடம் தகராறு செய்த கும்பல் அவரை விரட்டி சென்று வழியில் தென்பட்டவா்களையெல்லாம் தாக்கியுள்ளது. இதில் ராஜு உள்ளிட்ட பலா் காயமடைந்துள்ளனா்.

இதற்கிடையே கோவை சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரைப் பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டுள்ளாா். அதனால் துப்பாக்கியால் ஒருவா் சுடப்பட்ட நிலையில், 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இப்படி தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்-ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கையை மீறி போய்விட்டதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.