தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு இரு புதிய மாநில தகவல் ஆணையா்கள் பதவியேற்றனா். இவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) பிரிவு 15 -இன் துணைப் பிரிவு (3) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோரை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தகவல் ஆணையா்களாக நியமித்துள்ளாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதுல்ய மிஸ்ரா, அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக ஆளுநா் ஆா். என். ரவி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தலைமை தகவல் ஆணையா் ஷகீல் அக்தா், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலா் சி. சமயமூா்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா், மாநில தகவல் ஆணையா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

மாநில தகவல் ஆணையராக அ.விஜயராம் நியமனம்

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


