சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் மார்ச் 10ம் தேதி முதல் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் மேற்கொள்கிறார்.
சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய், உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது.
தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப். 6 ஆம் தேதி முதல் பிப். 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் மார்ச் 10ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் நேர்காணல் மேற்கொள்கிறார்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மார்ச் மத்தியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
கடந்த முறை, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாகவும், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி பேரவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாகவும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Party leader Vijay will be conducting interviews with those who have submitted their applications to contest the assembly elections on behalf of the Tvk party starting March 10th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
அரசியல் களத்தை மாற்றியிருக்கிறது தவெக! கே.ஜி.அருண்ராஜ் சிறப்பு நேர்காணல்!

இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான்: விஜய்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



