தவெகவுடன் பாஜக கூட்டணி என ஒரு வதந்தி பரவிக்கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை மறுநாள்(மார்ச் 11) திருச்சியில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தங்க கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசுகையில், "பாஜகவுடன் விஜய்யின் தவெக கூட்டணி என்றொரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. விஜய்யை நாளை சிபிஐ விசாரணைக்கு அழைத்ததற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழையும் தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று பேசியுள்ளார்.
சாத்தான்குளம் லாக்கப் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். தற்போது 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. நாமக்கல்லில் இரண்டு வயது சிறுமி ரத்தக் கறையுடன் இறந்தார். யாருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோல் நடக்கிறது? இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?" என்று தெரிவித்தார்.
Summary
Is NDA alliance with TVK vijay: Nainar Nagendran reply
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது? - நயினார் நாகேந்திரன் பதில்!

தொகுதி மாறியது ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்!

சாத்தூரில் போட்டி! நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


