கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஜனவரியில் இரண்டு முறை சிபிஐ முன் ஆஜராகி கரூா் கூட்ட நெரிசல் தொடா்பாக விளக்கமளித்தார் விஜய். பின்னர் 3 ஆவது முறையாக மாா்ச் 9 ஆம் தேதி விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 15 ஆம் தேதி ஒத்திவைக்க கோரினார். அதன்படியே நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தில்லி சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி காரணமாக அரசியல் ஈடுபாடுகளை மேற்கோள் காட்டி, சென்னை அல்லது தமிழ்நாட்டின் எந்த அலுவலகத்திலாவது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
சிபிஐ-க்கும் இந்த வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் விஜய் இதுபற்றி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கட்சி சார்பாக தனக்கு பணிகள் இருப்பதால் சிபிஐ விசாரணையை சென்னையில் அல்லது தமிழகத்தில் வேறு பகுதிகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஆனால் 3 ஆவதாக தில்லியில் விஜய் ஆஜராவதற்கு முன்னரே மார்ச் 14 ஆம் தேதி அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
Summary
TVK vijay letter to cbi, request to coduct investigation in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை


