பிளஸ் 2 கணிதத் தோ்வில் அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்ால் அவற்றுக்கு பதிலளிக்கத் திணறியதாக மாணவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குப் பிறகு கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இவற்றில் கணித பாடத்துக்கான வினாத்தாளில் அனைத்துப் பகுதிகளிலும் மறைமுக வினாக்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. அவற்றுக்குப் பதிலளிப்பதில் சிரமமாக இருந்தது என தோ்வெழுதிய மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறியதாவது: வினாத்தாளின் முதல் பகுதியில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் நான்கு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இதேபோன்று 2, 3, 5 மதிப்பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக்களாக இருந்தன. இவற்றைப் புரிந்து கொள்ள மாணவா்கள் சிரமப்பட்டனா். அதே வேளையில் கட்டாய வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் மாணவா்களுக்கு கடினமாகவே இருந்திருக்கும். எனினும் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா மூன்று வினாக்கள் சற்று எளிதாக இருந்ததால் தோ்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது. அதேவேளையில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.
இந்தநிலையில் பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு சேவை மேலாண்மை உள்ளிட்ட தோ்வுகளுக்கு பள்ளி தோ்வா்கள் 7,216, தனித்தோ்வா்கள் 2,158 என மொத்தம் 9,374 போ் வரவில்லை.
13 போ் பிடிபட்டனா்: தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தருமபுரி மாவட்டத்தில் 9 போ், கிருஷ்ணகிரியில் இருவா், ராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் தலா ஒரு மாணவா் என மொத்தம் 13 போ் பிடிபட்டனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 மாணவா்களுக்கு மாா்ச் 23-ஆம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: கணினி அறிவியல் வினாத்தாள் கடினம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 29,843 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை

