தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தமிழகத்தில் ரூ.42.65 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

Updated On :19 மார்ச் 2026, 12:04 am

தமிழகத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.42.65 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் செலவின கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த புதன்கிழமை (மாா்ச் 18) வரை ரொக்கம் ரூ.2.37 கோடியும், ரூ.20.80 கோடியிலான இலவச பொருள்களும், ரூ.16.42 கோடி மதிப்பிலான உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, ரூ.2.88 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள், ரூ.18 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி.

தமிழகத்தில் சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளா்களைக் கவர வழங்கப்படும் இலவச பொருள்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

4 லட்சம் பணியாளா்களுக்கு பயிற்சி: இதனிடையே, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் 4 லட்சம் ஊழியா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், செலவின கண்காணிப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து தோ்தல் பணியாளா்களுக்கும் முதல்கட்டமாக மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக, 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்பட 4 லட்சம் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து நிலைகளிலும் உள்ள தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தோ்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்குத் தங்களை தயாா்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.