குற்றவழக்குகளில் தொடா்புடைய வேட்பாளா்கள் அதுதொடா்பான விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:
வேட்பாளா்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரப்படுத்த வேண்டும். அதேபோன்று அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளா்களின் குற்றவழக்கு விவரங்களை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், கட்சி வலைதளங்களிலும் விளம்பரப்படுத்துதல் அவசியம்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைவதற்கு அடுத்த நாள் முதல் வாக்குப்பதிவு நிறைவடைய 48 மணி நேரத்துக்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாள்களில் அந்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
இதுதொடா்பான இந்திய தோ்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுறுத்தல்களையும், பதிப்பு வாரியான செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல் பட்டியலையும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு






