தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

திமுக கூட்டணியிலேயே காங்கிரஸுக்கு அடுத்தபடியாக தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு...

News image

பிரேமலதா விஜயகாந்த்

எக்ஸ்

Updated On :24 மார்ச் 2026, 1:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு (தேமுதிக) 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.

ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக தொகுதியில் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வருகைப்புரிந்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பிரேமலதா விஜயகாந்தும் கையொப்பமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பிரேமலதா பேசியதாவது:

''தேர்தல் கூட்டணிக்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 25 பேர் அடங்கிய பட்டியலை திமுகவிடம் வழங்கினோம். கூட்டணி நலனுக்காக குறைந்த தொகுதிகளைப் பெற்றுள்ளோம். நாங்களும் விட்டுக்கொடுத்துள்ளோம். நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்.

மார்ச் 27ஆம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.

நாளை அல்லது நாளை மறுநாள் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படும். திமுகவிடம் வழங்கிய விருப்பப் பட்டியலில் விருதாச்சலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 25 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.