சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

திமுக வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள் 125 பேர்!

திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :28 மார்ச் 2026, 12:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பரபரப்பைக் கூட்டி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலையும் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், நடைபெற இருக்கும் தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை உங்கள் முன்னால் வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, நான் பலமுறை சொன்னது போன்று, அரசியல் கூட்டணி மட்டுமல்ல; கொள்கைக் கூட்டணி. கூட்டணி எண்ணிக்கையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 70 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதில் 164 வேட்பாளர்களை நான் அறிவித்திருக்கிறேன். இதுபோக 11 வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னம் இருக்கிறது. அது தனித்தனி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. Official-ஆக தி.மு.க. வேட்பாளர்கள் 164 பேரைச் சொன்னேன்.

அதில், பட்டம் பெற்றவர்கள் 125. பெண்கள் 18 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். முனைவர்கள் 7 பேர். மருத்துவர்கள் 15 பேர். பொறியியல் பட்டதாரிகள் 17 பேர். சட்டம் படித்தவர்கள் 29 பேர். அதுமட்டுமல்ல, புதுமுகம் என்று கணக்கெடுத்துக் கொண்டால், 60-க்கு மேல் வருகிறது. அதுதான் முக்கியமானது. அனைவரும் அ.தி.மு.க. முன்பே அறிவித்துவிட்டது. தி.மு.க. இன்னும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார்கள். நாங்கள் கொஞ்சம் லேட்டாக வந்தோம்; ஆனால், லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறோம்.

ஏனென்றால் பல கூட்டணிக் கட்சிகள் இருக்கிறது. அனைத்துக் கட்சிகளுடனும் அமர்ந்து பொறுமையாக, அவர்கள் கேட்பது; நாங்கள் சொல்வது; மற்ற கட்சிகள் கேட்பது என்றெல்லாம் இருந்தது. அவை அனைத்தையும் சரிசெய்து, அனைவரையும் திருப்தி செய்து, அனைவரும் திருப்தியாக ஒப்புக்கொண்டு, அதன்பிறகு கையொப்பமிட்டு, அந்த அடிப்படையில்தான் செய்திருக்கிறோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. காலம் தாழ்த்தப்படவில்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.