தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். மு.க. ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் பொறுப்பில் இருந்தும் தோல்வி அடைந்துள்ளார்.
மு.க. ஸ்டாலினைப்போன்று ஆட்சியில் முதல்வராக இருந்து எதிர்கொண்ட தேர்தலில் தோல்வியை சந்தித்த முதல்வர்கள் குறித்துக் காணலாம்.
ஜெயலலிதா
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். ஆனால், திமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.
ஜானகி ராமச்சந்திரன்
1988 ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு இடைக்கால முதல்வராக ஜானகி ராமச்சந்திரன் இருந்தார். குறுகிய கால முதலமைச்சராக இருந்தவர், ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஒரே தேர்தலிலும் தோல்வியடைந்தார்.
பக்தவத்சலம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுகவின் ராஜரத்தினத்திடம் தோல்வியைத் தழுவிய அவர், அந்தத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
குமாரசாமி ராஜா
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக சென்னை மாகாண முதல்வராக (இப்போது தமிழ்நாடு) குமாரசாமி ராஜா தேர்வு செய்யப்பட்டார். முதல்வரான பிறகு 1952 ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் டி.கே. ராஜாவிடம் தோல்வியடைந்தார்.
Summary
Chief Ministers Who Lost Elections While in Power
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

கூட்டணி தலைவா்களின் பேராசை காரணமாக தோல்வி: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி: திமுக கள ஆய்வு தொடக்கம்

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



