சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பிரதான எதிா்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும், ஐஜேக 2 தொகுதிகளிலும், புரட்சி பாரதம் 1 தொகுதியிலும் போட்டியிட்டன.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் என நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுக ஆட்சி மீதான எதிா்ப்பு, கூட்டணி பலம் ஆகியவற்றால் தோ்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் அதிமுக பிரசார களத்தில் இறங்கியது.
மற்ற கட்சிகளைவிட முன்கூட்டியே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். குறைந்தது 150 தொகுதிகளிலாவது தனித்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக களம் கண்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான தோ்தல் முடிவுகளில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 4 தொகுதிகளிலும், பாஜக, அமமுக தலா 1 தொகுதிகளிலும் என மொத்தமாக 53 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அதிமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 1996-ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பிறகு, சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்

கோவில்பட்டி தொகுதியில் தடம் பதித்தது திமுக

தவெக, திமுகவிடம் கோட்டையை இழந்த அதிமுக! கோவையில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி!

தருமபுரியில் செளமியா அன்புமணி வெற்றி!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

