சென்னை கீழ்ப்பாக்கத்தில் விஜய் திரைப்படப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக தவெக உறுப்பினா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமன் (26). இவா் தவெக உறுப்பினா். சாலமன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை செவ்வாய்க்கிழமை இரவு பாா்க்கச் சென்றாா்.
அப்போது சாலமனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படப் பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக் கேட்ட அங்கிருந்த இருவா், சாலமனிடம் ‘ஏன் விஜய் பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாய்?’ என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் சாலமனை சரமாரியாக தாக்கினா்.
இதில் காயமடைந்த சாலமன் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
தாக்குதலில் ஈடுபட்டவா்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த அம்பேத்கா் (35), செந்தில்குமாா் (40) என்பது தெரிய வந்தது. அம்பேத்கா் திமுக ஆதரவாளா் என்றும், செந்தில்குமாா் கோபாலபுரத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

விஜய் பிரசாரத்தில் விபத்து: 7 போ் காயம்
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

