தவெக ஆட்சி அமைய திமுக இடையூறு செய்யாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க 6 மாதங்களுக்கு திமுகவினால் எந்த இடையூறும் இருக்காது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "திமுக, விரைவான ஓர் அரசியலமைப்பு நெருக்கடியையோ மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை. புதிதாக அமையவிருக்கும் அரசு, அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதே வேளையில் திமுக அரசின் திட்டங்களையும் தொடர வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமும் தொடரப்பட வேண்டும்.
இருப்பினும், பெண்களுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக விஜய் அளித்திருக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவது கடினம். நாங்கள் செய்ததுபோல, குறைந்தபட்சம் ரூ. 1,000 கொடுங்கள்.
2021 தேர்தலில் திமுகவின் வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாகவே, நீட் தேர்வு ரத்து போன்ற சிலவற்றைச் செய்ய முடியவில்லை.
இந்தத் தேர்தலிலும்கூட, எங்களால் நிறைவேற்றக்கூடியவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளித்தோம்.
ஆனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை தவெக வழங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி செய்தால், எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியமைப்பதில் தவெக மும்முரம் காட்டி வருகிறது.
இதனிடையே, திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில்தான், தவெக ஆட்சிக்கு திமுக எந்த இடையூறும் செய்யாது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Summary
DMK will not disturb TVK's administration for 6 month, says Former Chief Minister M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்கக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

”தவெக 3 மாதங்களாவது தாண்டுமா?” முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸ்! - மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!





