தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் குடிபோதையில் அரிவாளால் வெட்ட வந்த கணவரை அதே அரிவாளால் மனைவி வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை, துரைசாமிபுரத்தை சேர்ந்த சேர்ந்த ஈஸ்வரன் (32) தேங்காய் வெட்டும் வேலை செய்பவர். மனைவி ஈஸ்வரி (28). கூலி வேலை செய்கிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை ஈஸ்வரன் மதுபோதையில் மனைவி ஈஸ்வரியை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தாராம். இதனைச் சுதாரித்துக் கொண்ட மனைவி ஈஸ்வரி, அதே அரிவாளைப் பிடுங்கி கணவர் ஈஸ்வரன் கழுத்தை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, கோம்பை காவல் நிலையத்தில் ஈஸ்வரன் சரணடைந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Theni: Wife Hacks Husband to Death
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பூரில் தலை இல்லாத ஆண் சடலம்: கணவரை மனைவியே கொன்றாரா?

ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார்!

கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




