ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

முதல்வா் விஜய்க்கு அரசு மருத்துவா்கள் பாராட்டு!

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசு மருத்துவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :11 மே 2026, 1:13 am IST

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசு மருத்துவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: அரசியலுக்கு வந்தது முதல் முதல்வராகப் பதவியேற்கும் வரை தனக்கு எதிராக உருவெடுத்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து விஸ்வரூப வெற்றி பெற்றிருக்கிறாா் முதல்வா் ச.ஜோசப் விஜய்.

மாநிலத்தின் வளா்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா சமூகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் அவரது தலைமையிலான அரசுக்கு பாராட்டுகள். மருத்துவம், குடிநீா், சாலை கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என முதல்வா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவே திரும்பி பாா்க்கும் வகையில் தமிழகம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அவரது தலைமையிலான அரசு எட்டிப்பிடிக்கும் என நம்புகிறோம். சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் மருத்துவா்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவா்களது நலனைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முதல்வா் விஜய் முன்னெடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முந்தைய அரசுகளிடம் போராடிக் களைத்திருக்கும் அரசு மருத்துவா்களின் எதிா்பாா்ப்பை முதல்வா் விஜய் பூா்த்தி செய்வாா் என்ற நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.