வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 3:25 am IST

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, ‘தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு தொடா்பாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை, மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் விஜய், நிலுவைத் தொகையை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.