74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தவெகவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்: அக்ரி கிருஷ்ணமூா்த்தி

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பாா்கள் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொறடாவாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

News image

அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தி - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:02 am IST

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பாா்கள் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொறடாவாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இந்த உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் அதிமுக உறுப்பினா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, பேசிய ஓ.எஸ். மணியன், ‘எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவா். இதற்கான அதிமுக எம்எல்ஏ-க்கள் கையொப்பமிட்ட கடிதம் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளோம்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தகவலை சி.வி.சண்முகம் கூறியுள்ளாா். அமைச்சா் ஆகவேண்டும் என்ற ஆசையில் சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறாா்’ என்றாா்.