நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - தவெக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

News image

முதல்வர் விஜய் - Center-Center-Chennai

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை : தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தவெக எம்எல்ஏக்களுடன் சென்னை, பனையூர் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(மே 12) மாலை ஆலோசனை நடத்தினார்.

நாளை (மே 13) சட்டப்பேரவையில் புதிய அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அதில், கட்சி எம்எல்ஏக்கள் செயல்பாடு உள்ளிட்ட விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பேரவையில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பேரவையில் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தெரிவித்துள்ளார். பாமக தரப்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ள திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(மே 12) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெகவில் 108-2 = 106 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 2, இந்திய கம்யூனிஸ்ட்டில் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் 2, மன்னார்குடியில் அமமுக சார்பில் வென்றுள்ள எம்எல்ஏ காமராஜ் மற்றும் சி. வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அணியில் 30 எம்எல்ஏக்கள் என மொத்தம் 150 பேரின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Summary

Chief Minister Vijay holds key consultations with TVK MLAs and functionaries at the Panaiyur office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.