/

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

News image

முதல்வர் விஜய்.

Updated On :1 மணி நேரம் முன்பு

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இன்று (மே 12) இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த திருவாளர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் மே 10 ஆம் தேதி நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has written a letter to the Union Minister of External Affairs, requesting the release of Tamil Nadu fishermen detained by the Sri Lankan Navy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.