நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

அதிகரித்த முதல்வர் அலுவலக இன்ஸ்டா பின்தொடர்வோர்! ஒரே நாளில் 11 லட்சம் பேர்!

முதல்வர் அலுவலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் அதிகரிப்பு.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தின் (CMO TamilNadu) அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

தமிழக முதல்வர் அலுவலகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வரின் அரசு நடவடிக்கைகள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள், நலத்திட்ட அறிவிப்புகள், அரசாணை கையொப்பமிடும் நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் உள்ளிட்டவை மக்கள் தெரிந்துகொள்வதற்காக பகிரப்படுகின்றன.

முன்னதாக, முதல்வர் அலுவலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் 4 லட்சம் பின்தொடர்வோர்களுடன்(Followers) இயங்கி வந்த நிலையில், தமிழக முதல்வராக மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று(மே 12) ஒரே நாளில் மட்டும் 11 லட்சம் பின்தொடர்வோர்களைக் கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, 17 லட்சம் பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ளது. அரசு நிர்வகிக்கும் சமூக வலைதளப் பக்கம் குறுகிய காலத்தில் பின்தொடர்வோர்களின் அதிகரிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகவே உள்ளது.

இது புதிய அரசின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.

முதல்வரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, எக்ஸ், முகநூல் பக்கங்களை பின்தொடர்வோர்களும் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது.

Summary

1.1 million people have followed the official Instagram page of the Tamil Nadu Chief Minister's Office (CMO Tamil Nadu) in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.