தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு

Published On :

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிதித் துறைச் செயலர் உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்துள்ளது.

தமிழகத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கெய்டென்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தாரேஸ் அகமது, சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர்நலன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் தனிச்செயலர் - 3 ஆக இருந்த அனு ஜார்ஜ், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Summary

Five IAS Officers, Including Udayachandran, Transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.