சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

சென்னை விமான நிலையத்தில் கையில் வெளிநாட்டுப் பாஸ்போர்ட், விரலில் அழியாமையுடன் பிடிபட்ட 15 பேர்?

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் வந்த 15 பேர் விரலில் அழியா மை இருந்தது பற்றி..

News image

விரலில் தீட்டப்படும் மை - ENS

Updated On :14 மே 2026, 4:47 pm IST

சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் சோதனையில், வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்த 17 பயணிகளின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்களித்திருந்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த 15 பேர் சென்னை விமான நிலையத்திலும், இரண்டு பேர் மதுரை விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் முடிந்து விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு, அதிகாரிகளில் ஒருவர் அவர்களது கையில் அழியா மை இருந்ததைக் கவனித்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பிறகு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் எங்கெங்கு வாக்களித்தனர் என்ற விவரங்களும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.