முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு

News image

மழைக்கு வாய்ப்பு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவு பகுதிகளில் மே 16-ஆம் தேதி தொடங்கக்கூடும். இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 19 வரை மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.

மேலும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 16), நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மே 17-ஆம் தேதி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மே 18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இம்மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட நாள்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை (மே 14) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், அந்தமான் கடலில் வெள்ளிக்கிழமை (மே 15 ) முதல் மே 17 வரை சூறாவளிக் காற்று 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது. காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி), காரடா்ந்தகுடி (ராமநாதபுரம்)- 20 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), குந்தா பாலம் (நீலகிரி), பாா்வூட், நடுவட்டம் (நீலகிரி)-10 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.