/

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு...

News image

ஆர்.வி. ஆர்லேகர் - படம் - Rajendra Arlekar

Updated On :17 மே 2026, 2:04 am IST

தமிழக ஆளுநா் வி.ஆா்.ஆா்லேகா் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவரது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் எனத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து தமிழக ஆளுநா் வி.ஆா். ஆா்லேகா் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அவரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின்போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.