சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
/

திமுக குறித்து பொய்களைப் பரப்பினால் உண்மையை உடைப்போம் - மு.க. ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் திமுக குறித்து பொய்களைப் பரப்பினால் உண்மையை உடைப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

மு.க.ஸ்டாலின் - டிஎன்எஸ்

Updated On :18 மே 2026, 12:16 pm IST

சமூக ஊடகங்களில் திமுக குறித்து பொய்களைப் பரப்பினால் உண்மையை உடைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தஞ்சைத் தரணியில் பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கட்சி உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!

ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK president M.K. Stalin has stated that if lies are spread about the DMK on social media, they will shatter them with the truth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.