எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News image

ஆதவ் அர்ஜுனா

Updated On :18 மே 2026, 9:09 am IST

சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கு உள்ள கட்டுமான பணிகள், ஹாஸ்டல் உணவு, விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தேன். விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதை விட இதே இடத்தில் ஒரு ஹாஸ்டல் மாணவராக இருந்த விளையாட்டு வீரர் நான்.

இது என் வீடு. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் விளையாட்டு அவசியம். பிரேசிலில் போதை பழக்கம் அதிகமாக இருந்தபோது, அந்த அரசு விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததால் அதில் முதலிடம் பெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு விளையாட்டுத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளியிலிருந்தே கல்விக்கு நிகராக விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தி இருக்கிறார்.

அதே போல சர்வதேச அளவில் போட்டிகள் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டார். ஆய்வு செய்தபின் மாணவர்களுடன் அமைச்சர் உரையாடி மகிழ்ந்தார்.

Summary

Public Works and Sports Minister Adhav Arjuna inspected the Nehru Indoor Stadium in Periyamedu, Chennai today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.