பிகாரில் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
பிகார் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சசாரம்-பாட்னா பயணிகள் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எந்தப் பயணியும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. மின்கசிவு காரணமாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று மத்திய பிரதேசத்தில் ராஜதானி விரைவு ரயிலின் ஏ.சி. பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
A major fire broke out in a coach of the Sasaram-Patna passenger train at Sasaram railway station in Bihar’s Rohtas district on Monday while the train was stationed at the platform, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து!

பரமக்குடி ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

