பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!

தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக இடம்பெறும் விசிக, ஐயுஎம்எல்...

News image

நாளை காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா: (உள்படம்) வன்னி அரசு | ஷாஜகான்

Updated On :21 மே 2026, 10:52 pm IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது. புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமில்லாது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அடுத்ததாக இணைந்துள்ளது.

பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான், அவருடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து திண்டிவனம் எம்எல்ஏ வன்னி அரசும் நாளை (மே 22) அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (மே 22) காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். வி. அர்லேகர் புதிதாகப் பதவியேற்பவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu Governor R.V. Arlekar will administer the oath of office to the newly appointed members during the swearing-in ceremony, which is scheduled to take place on Friday (May 22) at 9:30 AM in the presence of Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.