விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!

வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்பார் - திருமாவளவன் அறிவிப்பு...

News image

வன்னி அரசு - Center-Center-Chennai

Updated On :21 மே 2026, 8:50 pm IST

தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகப் பதவியேற்ற வன்னி அரசு அமைச்சராகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது. புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமில்லாது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அடுத்ததாக இணைந்துள்ளது.

அக்கட்சியிலிருந்து வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 21) இரவு அறிவித்தார்.

இது குறித்து, விசிக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், “எங்கள் உயர்நிலைக் குழுவில் அமைச்சரவையில் இடம் பெறாமல் ஆதரவு தருவது என்று முடிவு எடுத்தோம். ஆனால், உயர்நிலைக் குழுவில் பெரும்பாலானவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தைச் சொன்னதால் அதனை மீண்டும் பரிசீலித்து ஏற்றுக்கொண்டதாகத்” தெரிவித்தார்.

பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 22) அமைச்சராகப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்த்து வன்னி அரசும் நாளை அமைச்சர் பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

VCK Vanni Arasu decides to join the government, says VCK chief Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.