டோரதி படக் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு!
டோரதி படக் குழுவினரை அமைச்சர் வன்னி அரசு நேரில் அழைத்துப் பாராட்டியது குறித்து...

டோரதி படக்குழுவினருடன் அமைச்சர் வன்னி அரசு. - படம் - தினமணி
டோரதி படக் குழுவினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு புதன்கிழமை (அக். 14) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடனிருந்த படக்குழுவினருக்கும் அமைச்சர் வன்னி அரசு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:
நேற்றுதான் டோரதி படம் பார்த்தேன். படக்குழுவை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று இன்றைய தினம் பாராட்டினேன். டோரதி படம் சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாதிய கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நிறைய பேர் வந்துள்ளது மகிழ்ச்சி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.
பெண்கள் பலவீனமாக இருப்பதாக சமூகக் கட்டமைப்பு உள்ளது. திருநங்கைகள் எப்படி புறக்கணிப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என பார்க்கிறோம். திருநங்கைகள் மனித சமூகத்தில் ஒரு அங்கம் என அங்கீகாரம் செய்யப்படவில்லை. டோரதி திரைப்படம் திருநங்கையருக்கான புதிய மலர்வை உருவாக்கி உள்ளது. இது போன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும் என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி:
மக்கள் டோரதி படத்தை திரையரங்கில் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். சமூகத்தில் சிறிய மாற்றம் உருவாகி உள்ளது என்று மக்கள் சொன்னார்கள். இப்போது அமைச்சர் வன்னி அரசு பாராட்டியது மகிழ்ச்சி என்றார்.
டோரதி திரைப்படத்திற்கு விமர்சனமும் எதிர்ப்புகளும் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “சமூகக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்ய நினைத்தால் எதிர்ப்பு வரத்தான் செய்யும்” என்றார்.
Summary
Minister for Social Justice Vanni Arasu personally invited the Dorothy film crew to the Secretariat on Wednesday (Oct. 14) and commended them.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


