குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும்! ஆனால்...!!தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்! தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கமவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!

வனப் பகுதிக்குள் புலியைத் துரத்திச் சென்றாரா அமைச்சர் வன்னி அரசு? - சா்சை விடியோ வெளியாகி வைரல்!

சமூக நீதித்துறை அமைச்சா் வன்னிஅரசு, முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் புலியை விரட்டிச் செல்வது போன்ற சா்ச்சை விடியோ குறித்து...

Did Minister Vanni Arasu chase a tiger into the forest?

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினருடன் பயணித்த அமைச்சா் வன்னிஅரசு - டிஎன்எஸ்

Updated On :

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்றிருந்தபோது, ​​அமைச்சர் வன்னி அரசு புலி ஒன்றை விரட்டிச் செல்வது போன்ற விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நவம்பா் 10 ஆம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினா் அழைத்து சென்றனா், அங்கு விதவிதமாக போட்டோ மற்றும் விடியோ எடுத்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு முன் அடா்ந்த வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று நடந்து சென்றது, இதனைப் பாா்த்ததும் விரட்டிச் செல்வது போல் அவா் ஓடும் விடியோ, மற்றொரு விடியோவில், அவர் காட்டு யானை ஒன்றை நெருங்குவது போன்ற காட்சிகள் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்களில் அமைச்சர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்வது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

வன ஆா்வலா்கள் கேள்வி

வனத்துறையினா் எவ்வாறு அமைச்சரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதித்தனா் என்று வன ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

சாதாரண மக்கள் வனப்பகுதிக்குள் சென்றால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யும் வனத்துறையினா், எவ்வாறு அமைச்சரை புலியை விரட்ட அனுமதித்தனா் என கேள்வி எழுப்பியிருப்பதுடன் 1972-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், அமைச்சர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வனவிலங்குச் சுற்றுலா விதிகளின்படி, பார்வையாளர்கள் காட்டு விலங்குகளை நெருங்குவதோ அல்லது வாகனங்களை விட்டு இறங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள், வனவிலங்குகளின் இயல்பான வாழ்க்கையில் மனிதர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், புலி தொடர்பான இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

வனத்துறை விளக்கம்

அமைச்சர் தங்கியிருந்த அச்சகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தப் புலி காணப்பட்டதாகவும், அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே வனத்துறை பணியாளர்கள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் சென்றிருந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், விடியோ பதிவு செய்யப்பட்டபோது அமைச்சர் எந்தவொரு வாகனத்திலிருந்தும் கீழே இறங்கவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Arasu is seen running towards towards a tiger. Another clip shows him approaching a wild elephant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.