இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்றது பற்றி...

Amalraj

ஏ. அமல்ராஜ் - Dinamani

Published On :22 மே 2026, 9:41 am IST

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து வியாழக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஏப்ரலில் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கட்டாய காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்த அமல்ராஜ், காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடியின் கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A. Amalraj Assumes Charge as Chennai Metropolitan Police Commissioner!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.