வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்: திமுக தலைவர் மு. க .ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி கூட்டத்தில் மு. க. ஸ்டாலின்...

News image

திமுக இளைஞர் அணி கூட்டத்தில் மு. க .ஸ்டாலின்... - திமுக பதிவிலிருந்து

Updated On :23 மே 2026, 10:20 pm IST

சென்னை : ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள் என்று திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் இன்ரு கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 23) மாலை நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், எஸ்.ஜோயல், இன்பா ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், பிரபு கஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், ஜி.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைப்பாளருமான ஜெயக்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் ராமஜெயம், எவரெஸ்ட் நரேஷ் குமார், மணிராஜன், வழக்கறிஞர் பிரகாஷ், ஈஸ்வரப்பன் அன்பகம் செந்தில் உள்பட கழக இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மீதும், கட்சித் தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், ஜூன் - 3இல் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுதல் என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனத் தீர்மானம் என்று நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது :

“திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்! இனி நம் திட்டம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துதல் செய்வோம்.

ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்!” என்று தெரிவித்தார்.

Summary

DMK Youth Wing meet: Stalin tweets about DMK plans for future

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.