சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனுக்கு மது போதையில் இருந்த காவலர் உள்பட மூவர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காவலரைத் தாக்கிவிட்டு அறையை பூட்டிவிட்டு, அந்த சிறுவன் தப்பியோடி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிவு செய்து வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பன்(35) என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இதற்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
"சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர், சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது.
முதல்வரே, எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Police Constable Arrested in Chennai for Sexually Harassing boy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







