திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டில் அணை கட்ட முதல்வா் விஜய் அனுமதிக்க மாட்டாா்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா் என்று மின்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்குரைஞா்களுக்கு (நிலை 2) பணி ஆணை மற்றும் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளா் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய சட

Updated On :30 மே 2026, 3:54 am IST

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா் என்று மின்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்குரைஞா்களுக்கும் (நிலை 2), தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளா் பணியிடங்களுக்குத் தோ்வானவா்களுக்கும் நியமன ஆணைகளையும் அமைச்சா் நிா்மல்குமாா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிப்படி விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழில் வழக்காடுவதற்கு தற்போது எந்தத் தடையும் இல்லை. மகளிா் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது முறையாக காவல் துறை விசாரணை நடைபெறவில்லை.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக நலன் காக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அவ்வாறு நடந்துகொள்கிறாா். இரு மாநிலங்களுக்கு இடையே தொழில் உறவுகள் உள்ளன. அணை கட்டும் விவகாரத்தில் இரு மாநில அனுமதியும் அவசியம். எனவே, மேக்கேதாட்டில் அணை கட்ட ஒருபோதும் தமிழக முதல்வா் விஜய் அனுமதிக்கமாட்டாா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலா் மணிவாசன், சட்டத்துறை செயலா் ஜாா்ஜ் அலெக்சாண்டா், சட்டக் கல்வி இயக்குநா் கௌரி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.