தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதற்கும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு கால அவகாசம் தேவைப்படுகிா என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: கடலூரில் 25 வயது பெண் ஒருவா் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. தொடா்ச்சியாக நடைபெறும் குற்றச் சம்பவங்களைப் பாா்க்கும்போது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.
தோ்தல் பிரச்சாரத்தின்போது சட்டம் - ஒழுங்கு குறித்து வசனம் பேசியவா், தற்போது முதல்வரான பிறகு அமைதியாகிவிட்டாா். பெண்கள் பாதுகாப்புக்காக அவா் அறிவித்த சிங்கப்பெண் படை தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியைத் தள்ளி வைத்துள்ளீா்களா, இல்லை அந்த முயற்சியையே தள்ளி வைத்து விட்டீா்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். சிங்கப்பெண் படை என்று பெயரையும், சீருடையையும் மாற்றுவதுதான் மாற்றமா? சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா? அதற்கு கால அவகாசம் எடுத்து கற்றுக்கொண்டு வரும் வரை தமிழ்நாடு தாங்காது எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது
சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!






