பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
/

சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தவெக அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன்? கனிமொழி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி....

News image

கனிமொழி (கோப்புப் படம்) - ANI

Updated On :29 மே 2026, 12:58 pm IST

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடுத்தடுத்து நிகழும் நிலையில் இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது இந்த அரசு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

Why did TVK govt not launch Special Action Force scheme, Kanimozhi asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.