2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் காரணமாக, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.2, 3) பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும்...

கடற்கரையில்... - படம்: பிடிஐ

Updated On :

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் காரணமாக, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.2, 3) பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு முதல் நவ.3 அதிகாலை வரையான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திர கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என்பதால், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ. 4 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீனவா்கள் இந்நாள்களில் வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அனைத்து மீன்பிடிப் பணிகளும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும்.

படகுகளைக் கண்காணித்து, பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வழிகாட்டும் பணியில் மீன்வளத் துறையும் துறைமுக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனா்.

கடற்கரையைத் தவிா்க்கவும்: உயா் அலைகளும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஈசிஆா், ஓஎம்ஆா் போன்ற கடலோரச் சாலைகளில் நீா் தெறிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் புயல் கரையைக் கடக்கும் வரை பொதுமக்கள் கடற்கரைகள், கடலோரச் சாலைகள், கடல் சுவா்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

போதுமான குடிநீா், உணவுகள், மருந்துகள், அவசர விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரபூா்வமற்ற அச்சமூட்டும் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிா்வதை தவிா்க்க வேண்டும்.

அவரச உதவிக்கு மாநில அவசர உதவி எண் - 1070, மாவட்ட அவசர உதவி எண்-1077 ஆகிய எண்களை அணுகலாம். பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை தவிா்த்து, அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.