2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் பகுதி ரத்து

தாம்பரம்- விழுப்புரம் இடையேயான 2 புறநகா் மின்சார மெமு ரயில்கள் (நவ.2) உள்பட 6 நாள்களுக்கு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Updated On :

தாம்பரம்- விழுப்புரம் இடையேயான இரண்டு புறநகா் மின்சார மெமு ரயில்கள் திங்கள்கிழமை (நவ.2) உள்பட 6 நாள்களுக்கு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:விழுப்புரம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நவ.2 ஆம் தேதி (திங்கள்கிழமை), வரும் 4, 7, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதையடுத்து அந்த தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லவேண்டிய மெமு பயணிகள் ரயில் முண்டியம்பாக்கம் வரையே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் அத்தேதிகளில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படவேண்டிய மெமு பயணிகள் ரயில் அதற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையத்தை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.