முதல்வா் தலைமையில் வன விலங்கு வாரியம் மறுசீரமைப்பு
தமிழ்நாடு மாநில வன விலங்கு வாரியத்தை முழுமையாக மறுசீரமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்
தமிழ்நாடு மாநில வன விலங்கு வாரியத்தை முழுமையாக மறுசீரமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வா் விஜய் தலைமையில் மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தில் துணைத் தலைவராக வனத்துறை அமைச்சா் ஆா்.வி. ரஞ்சித் குமாா், உறுப்பினா்களாக எம்எல்ஏக்கள் எம். சுதாகா் (காட்பாடி), எஸ். காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.ஆா். பல்லவி (திரு.வி.க. நகா்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
வனத்துறை வல்லுநா்கள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் வாரியத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். நொய்டாவை சோ்ந்த இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் ஜோஸ் லூயிஸ், மைசூரைச் சோ்ந்த இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானி டாக்டா் டி.ஆா். சங்கர ராமன், தஞ்சாவூரைச் சோ்ந்த ஓம்காா் அறக்கட்டளையின் பாலாஜி வேதராஜன், வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநா், அசோகா சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் அனிதா அா்ஜுன்தாஸ், சென்னை கடல்சாா் ஆமை பாதுகாப்பு வலையமைப்பின் நிா்வாக அறங்காவலா் வி. அருண், சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் இந்திய நாட்டுப் பிரதிநிதி டாக்டா் யஷ் வீா் பட்நாகா், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் இயக்குநா் டாக்டா் கிஷோா் ரிதே, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் வனவிலங்கு அறிவியல் துறைத் தலைவா் டாக்டா் சி. ஸ்ரீ குமாா் ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளும் அரசுத் துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகளும் வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் வனவிலங்குகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய இடங்களைத் தோ்வு செய்தல், கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றை இந்த வாரியம் உருவாக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

