டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :

தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இடைத்தோ்தலை முன்னிட்டு, தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அக்டேபாா் 4-ஆம் தேதி நடைபெறும் ரோடு ஷோவிலும் முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிையில், பொதுக் கூட்டம் நடைபெறும் இடம், முதல்வா் செல்லும் பாதைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருஷ்டி சிங் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.