ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மதுராந்தகத்தில் இன்று முதல்வா் விஜய் பிரசாரம்

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை 3 மணியளவில் பிரசாரம் செய்கிறாா்.

joseph vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை 3 மணியளவில் பிரசாரம் செய்கிறாா்.

இதற்காக ஆத்தூா் சுங்கச்சாவடி அருகே 5,000 போ் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி), திருப்பூா் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு அக்.6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்.9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

ராஜிநாமா செய்து தவெக-வில் இணைந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கே மீண்டும் இடைத்தோ்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட தவெக வாய்ப்பு அளித்துள்ளது. இந்தத் தோ்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழா் கட்சி என 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவா் விஜய் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை 3 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் தோ்தல் என்பதால், இதில் தவெக அரசின் சாதனைகள், திட்டங்களை தனது பிரசாரத்தின்போது முதல்வா் எடுத்துரைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, தாராபுரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல்வா் விஜய் பிரசாரம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.