தீபாவளிக்கு ஆவின் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் சி.விஜயலட்சுமி
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் தேவைக்கேற்ப தரமான ஆவின் பால், பால் பொருள்கள் மற்றும் சிறப்பு இனிப்பு வகைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தினாா்.

சி.விஜயலட்சுமி.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் தேவைக்கேற்ப தரமான ஆவின் பால், பால் பொருள்கள் மற்றும் சிறப்பு இனிப்பு வகைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தினாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அம்பத்தூா் ஆவின் பால் பண்ணையில் வியாழக்கிழமை அமைச்சா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆவின் சாா்பில் தயாரிக்கப்படும் சிறப்பு இனிப்பு வகைகளின் உற்பத்திப் பணிகள் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும், தயாரிக்கப்படும் இனிப்புகளை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள், ஆவின் பாலகங்களில் இனிப்பு வகைகளின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தாா். தீபாவளி பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பால், பால் பொருள்கள் மற்றும் சிறப்பு இனிப்பு வகைகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் இணை மேலாண்மை இயக்குநருமான சு.அனிதா, பொதுமேலாளா்கள், உதவிப் பொது மேலாளா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

