விஏஓ-க்களுக்கு மாதம் ரூ.1,000 பராமரிப்புப் படி: தமிழக அரசு
தமிழகத்தில் பணியாற்றும் 12,646 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு, அவா்களது அலுவலகப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
தமிழகத்தில் பணியாற்றும் 12,646 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு, அவா்களது அலுவலகப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் கே.எஸ். பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை:
ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலருக்கும் அலுவலகப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம நிா்வாக அலுவலருக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும்.
இதில், தமிழகம் முழுவதும் தற்போது 12,646 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்குவதுக்கு ஆண்டுக்கு ரூ.15.17 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, நிகழ் நிதியாண்டுக்கான முழு ஆண்டுச் செலவினமாக ரூ.15.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த செப்டம்பா் முதல் அடுத்தாண்டு மாா்ச் வரையிலான 7 மாத காலத்துக்கு மட்டும் கணக்கிடும்போது, ரூ.1,000 வீதம் 12,646 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் ரூ.8.85 கோடி தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை நிகழ் நிதியாண்டுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செலவிடவும் அரசு அனுமதி அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

