வானிலை: நவ. 12-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது குறித்து...

டெல்டா வெதர்மேன் பதிவு - எக்ஸ்
தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 12 ஆம் தேதி உருவாகக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக நவ. 15 முதல் 20 வரை 3 ஆம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் நவ. 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல கூடாது. ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் நவ. 13 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சலனம் புயலாக மாறுமா? என்பது நவ 13 ஆம் தேதி உறுதிப்படுத்தலாம். இச்சலனம் காரணமாக வடதமிழகம் & காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய சாதக நிலை காணப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
Summary
New depression to form on Nov. 12 Warning issued for fishermen
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


