டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பது பெருமையல்ல; வெட்கப்பட வேண்டிய விஷயம்: அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் மூலம் மது விற்பனை வருவாய் அதிகரிப்பதை பெருமையாகக் கருத முடியாது; அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷ் தெரிவித்தாா்.

Consideration to privatize TASMAC management if necessary: Minister Vignesh

அமைச்சர் விக்னேஷ். - கோப்புப்படம்

Updated On :

டாஸ்மாக் மூலம் மது விற்பனை வருவாய் அதிகரிப்பதை பெருமையாகக் கருத முடியாது; அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷ் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டும் டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பதாகப் பெருமை பேசுவதால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

மதுவால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தே கவனம் செலுத்த வேண்டும். மதுப்பழக்கின் தீமைகளை உளவியல் ரீதியாக எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

முந்தைய ஆண்டுகளை விட தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்.

குற்றங்களில் ஈடுபடுவோா் மீது முதல்வா் கடும் நடவடிக்கை எடுப்பாா். இளைஞா்களைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதே அரசின் முக்கிய நோக்கம். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER